ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் கோடி அர்ச்சனை நிகழ்ச்சி


ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் கோடி அர்ச்சனை நிகழ்ச்சி
x

பாளையங்கோட்டை ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் கோடி அர்ச்சனை நிகழ்ச்சி நடந்தது.

திருநெல்வேலி

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் 83-வது அவதார விழாவை முன்னிட்டு செவ்வாடை பக்தர்களும், தொண்டர்களும் உலக நலனுக்காக குரு போற்றி கோடி அர்ச்சனை செய்தனர்.

இதையொட்டி பாளையங்கோட்டையில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்திலும் கோடி அர்ச்சனை நிகழ்ச்சி நடைபெற்றது. மன்ற பொறுப்பாளர் ராமையா தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பூஜை செய்தனர்.

இதே நேரத்தில் 15 நாடுகளைச் சேர்ந்த 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவ்வாடை பக்தர்கள் இணையவழி கூட்டு வழிபாட்டில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சி வேர்ல்ட் ரெக்கார்ட் யூனியன் என்ற உலக சாதனைக்கான அதிகாரப்பூர்வ பதிவு நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டது. அந்த நிறுவனத்தின் அலுவலர்களின் நேரடி பார்வையில் இந்த கோடி அர்ச்சனை உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது என்று பாளையங்கோட்டை மன்ற பொறுப்பாளர் ராமையா தெரிவித்துள்ளார்.


Next Story