கொடிமரத்து பேச்சியம்மன் கோவில் கொடை விழா செவ்வாய்க்கிழமை தொடக்கம்


கொடிமரத்து பேச்சியம்மன் கோவில் கொடை விழா செவ்வாய்க்கிழமை தொடக்கம்
x

கழுகுமலை கொடிமரத்து பேச்சியம்மன் கோவில் கொடை விழா செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது

தூத்துக்குடி

கழுகுமலை:

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலுக்கு பாத்தியப்பட்ட கொடிமரத்து பேச்சியம்மன் மற்றும் அண்ணா கீழத் தெருவில் அமைந்துள்ள திரிபுரசுந்தரி அம்மன் கோவில் கொடை விழா நாளை(செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. கொடை விழாவை முன்னிட்டு நாளை காலை கொடியேற்றம் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து வருகிற 3-ந்தேதி காலையில் காப்புக்கட்டுதல், 5-ந் தேதி அண்ணா கீழத் தெருவில் அமைந்துள்ள திரிபுரசுந்தரி அம்மன் கோவில் முன்பு விளக்கு பூஜை நடைபெறுகிறது. வருகிற 6-ந் தேதி மாலை 5 மணிக்கு அம்மன் ஊர் விளையாடல் அதனைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு வில்லிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. 7-ந் தேதி காலை 10 மணிக்கு பால் குடம் எடுத்து வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு வானவேடிக்கை உடன் மாவிளக்கு ஊர்வலம் நடைபெறுகிறது. வருகிற 8-ந் தேதி மதியம் 3 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம் நடைபெறுகிறது. 9-ந் தேதி சிறுவர், சிறுமியருக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது. அன்று இரவு 9 மணிக்கு இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது.


Next Story