கொடிமரத்து பேச்சியம்மன் கோவில் கொடைவிழா


கொடிமரத்து பேச்சியம்மன் கோவில் கொடைவிழா
x
தினத்தந்தி 19 May 2023 12:15 AM IST (Updated: 19 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கழுகுமலை கொடிமரத்து பேச்சியம்மன் கோவில் கொடைவிழா திங்கட்கிழமை தொடங்குகிறது.

தூத்துக்குடி

கழுகுமலை:

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலுக்கு பாத்தியப்பட்ட கொடிமரத்து பேச்சியம்மன், கழுகுமலை அண்ணா கீழத்தெரு திரிபுர சுந்தரி பேச்சியம்மன் மற்றும் அண்ணா மேலத்தெரு விநாயகர் கோவில் கொடைவிழா நாளைமறுநாள்(திங்கட்கிழமை) தொடங்குகிறது. அன்று இரவு 9 மணிக்கு வடக்குத்தி அம்மன் வழி அனுப்புதல் நிகழ்ச்சி நடக்கிறது. மே.23-ந் தேதி காலை 10 மணிக்கு மேல் கொடியேற்றம் நடக்கிறது. மே.26-ந் தேதி காலை 9மணிக்கு மேல் காப்பு கட்டுதலும், மே.28-ந் தேதி காலை 5 மணிக்கு கொடிமரத்து பேச்சியம்மனுக்கு கும்பாபிஷேகமும், இரவு 7 மணிக்கு திரிபுரசுந்தரி அம்மன் கோவில் முன்பு விளக்கு பூஜையும் நடைபெறுகிறது. மே.29-ந் தேதி மாலை 5மணிக்கு அம்மன் ஊர்விளையாடலும், மே.30-ந் தேதி பால்குட ஊர்வலமும் நடக்கிறது. பகல் 12 மணிக்கு அம்மனுக்கு பாலாபிஷேகமும், சிறப்பு பூஜைகளும், இரவு 9 மணிக்கு மாவிளக்கு ஊர்வலமும், நள்ளிரவு 12 மணிக்கு சாமக்கொடை பூஜைகளும் நடைபெறுகிறது. மே.31-ந் தேதி மாலை 2.30 மணிக்கு முளைப்பாரி ஊர்வலமும், தொடர்ந்து ஜூன் 6-ந் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றது


Next Story