கொடுமுடி காவிரி ஆற்று படித்துறை சுத்தப்படுத்தப்பட்டது


கொடுமுடி காவிரி ஆற்று படித்துறை சுத்தப்படுத்தப்பட்டது
x

கொடுமுடி காவிரி ஆற்று படித்துறை சுத்தப்படுத்தப்பட்டது.

ஈரோடு

கொடுமுடி

கொடுமுடியில் மிகவும் பிரசித்தி பெற்ற மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி மற்ற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வந்து காவிரியில் புனித நீராடி சாமி தரிசனம் செய்வது வழக்கம். இதேபோல் காவிரி கரையில் அமைந்துள்ளதால் ஒரு சிறந்த பரிகார தலமாகவும் விளங்குகிறது. இதனால் தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகாளய பட்ச அமாவாசை, சித்திரை தேர் திருவிழா போன்ற நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தங்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து சாமி தரிசனம் செய்வார்கள்.

இதனால் காவிரி படித்துறையில் பழைய துணிகளை அப்படியே போட்டு விட்டு சென்றதால் மற்ற குப்பைகள் அதிகமாக குவிந்தது. எனவே குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. கொடுமுடி பேரூராட்சி தலைவர் திலகவதி சுப்ரமணி தலைமையில் உடனடியாக காவிரி படித்துறையின் அனைத்து இடங்களிலும் உள்ள குப்பைகளை தூய்மை பணியாளர்கள் அகற்றினார்கள். இதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.


Next Story