கோவில்பட்டி உதவி கலெக்டர்அலுவலகத்தை சமத்துவ மக்கள் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம்


கோவில்பட்டி உதவி கலெக்டர்அலுவலகத்தை  சமத்துவ மக்கள் கட்சியினர்   முற்றுகையிட்டு போராட்டம்
x
தினத்தந்தி 12 Nov 2022 12:15 AM IST (Updated: 12 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி உதவி கலெக்டர்அலுவலகத்தை சமத்துவ மக்கள் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் அகில சமத்துவ மக்கள் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமையில் ஏராளமானோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். இங்குள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நகராட்சி தினசரி சந்தைக்கு, தினமும் வரும் வாகனங்களுக்கு நகராட்சி ஊழியர் மூலம் போலியாக ரசீது புத்தகங்கள் தயார் செய்து, பெருமளவில் நகராட்சிக்கு வருவாய் இழப்பீடு செய்யப்பட்டு வருகிறது. இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து, அவர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. பின்னர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர். தொடர்ந்து தாலுகா அலுவலகத்திலும் கோரிக்கை மனு கொடுத்துவிட்டு, அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story