உடுமலையில் களை கட்டும் வண்ணக்கோல பொடி விற்பனை


உடுமலையில் களை கட்டும் வண்ணக்கோல பொடி விற்பனை
x
திருப்பூர்


உடுமலை பகுதியில் பொங்கல் பண்டிகைக்கு தேவையான வண்ண கோல பொடிகளின் விற்பனை களை கட்ட தொடங்கியுள்ளது.

பொங்கல் பண்டிகை

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ளன. இந்த நிலையில் விழா கொண்டாட்டத்திற்கு தேவையான பொருட்களை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் மார்க்கெட், கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

மண்பானை, புத்தாடைகள், செங்கரும்பு என பொங்கல் பண்டிகைக்கு தேவையான பல பொருட்களின் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் தற்போது பொங்கல் நாளில் கோலம் போடுவதற்கான வண்ண கோல பொடிகளின் விற்பனையும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. உடுமலை சுற்றுவட்டார பகுதியில் ஆங்காங்கே சாலையோரங்களில் பல வித வண்ணங்களில் கோலப்பொடிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

களை கட்டும் விற்பனை

குறிப்பாக உடுமலை பஸ் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான கடைகளில் வண்ணக் கோலப்பொடிகள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதேபோல் உழவர் சந்தை அருகே உள்ள பகுதிகளிலும் கோலப்பொடி விற்பனை நடந்து வருகிறது. மங்கல கோலமிட மங்கையர்களுக்கு எப்போதுமே ஆர்வம் அதிகம் என்பதால் கோலப்பொடிகளை வாங்க கடைகளில் பெண்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.

உடுமலை பகுதியில் விற்கப்படும் கோலப்பொடிகளுக்கு மவுசு அதிகம் என்பதால் இங்கு உள்ளூர் பகுதி மக்கள் மட்டுமின்றி, வெளியூரை சேர்ந்தவர்களும் கோலப்பொடிகளை வாங்கி செல்கின்றனர். விற்பனை களை கட்ட தொடங்கியுள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Next Story