கூண்டு முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு
நாட்டு கோழி முட்டைகளுக்கு நல்ல விலை கிடைப்பதால் கோழி முட்டைகள் மூலம் வருவாய் ஈட்டுகின்றனர். மேலும் கோழிகள் முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொரிப்பதன் மூலம் கூடுதல் வருவாய் ஈட்டுவதற்கான வழிபிறக்கிறது.
பொதுவாக பொரித்த குஞ்சுகளை தாய்க்கோழி முனைப்புடன் பாதுகாக்கும். இருந்தாலும் காகம், பருந்து, வல்லூறு, நாய் மற்றும் பூனைகள் நாட்டுக்கோழிக்குஞ்சுகளை பிடித்து சாப்பிட்டு விடும். அதனால் 10 குஞ்சுகள் பொரித்தால் 6 அல்லது 7 குஞ்சுகள் போக மீதமுள்ள 2 அல்லது 3 குஞ்சுகளே கோழியாக வளர்கிறது. இது நாட்டுக்கோழி வளர்ப்பில் வருவாய் இழப்பை ஏற்படுத்தும் விஷயமாக உள்ளது. இதனைக்கருத்தில் கொண்டு திருச்சி கால்நடைப்பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், நாட்டுக்கோழிகளை வளர்க்க பிரத்தியேகமான கூண்டு ஒன்றை வடிவமைத்துள்ளது. 6 அடி நீளம், 4 அடி அகலம், 2 முதல் 3 அடி உயரம் கொண்ட அரை அங்குல கம்பிகளால் ஆன கூண்டை இரும்பினாலான சட்டத்தில் பூமிக்கு மேல் 3 அடி உயரத்தில் பொறுத்த வேண்டும். கூண்டு தரைக்கு அரை அடி கீழே கோழி இடும் எச்சத்தை சேகரிக்க எச்ச சேகரிப்புத்தட்டு (Dropping Tray) ஒன்றும் பொருத்தப்பட வேண்டும். நீளத்தின் மத்தியில் 3 அடியிலும் அகலத்தின் மத்தியில் 2 அடியிலும் இதே கம்பி வலை கொண்டு தடுப்பு பொருத்தப்பட வேண்டும்.
இந்த வடிவமைப்பில் 6 அடி நீளம், 4 அடி அகலம் கொண்ட கூண்டு 4 அறைகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அறையும் 3 அடி நீளம், 4 அடி அகலமாக இருக்கும். 6 சதுர அடி கொண்ட ஒரு அறையில் 10 நாட்டுக்கோழிகளை 144 கிலோ உடல் எடை அடையும் வரை வளர்க்கலாம். அறையில் 3 அடி நீளத்தின் மத்தியில் ஒரு அடி அளவில் திறந்து மூட கதவு ஒன்றைப் பொருத்த வேண்டும். கோழிகளைப் பாதுகாக்க கதவில் தாழ்ப்பாள் பொருத்திப் பூட்டிக் கொள்ளலாம். கூண்டிற்கு இரும்புத் தகடினால் ஆன கூரை ஒன்றைப் பொருத்த வேண்டும். கூண்டின் மையத்தில் 3 அடி உயரமும், பக்கவாட்டில் 2 அடி உயரமும், கூண்டின் உயரம் இருக்குமாறு கூரை ஒன்றை அமைக்க வேண்டும்.
கூண்டின் 4 அறைகளிலும் சேர்த்து மொத்தமாக 40 கோழிகளை வளர்க்கலாம். கூண்டின் கீழேயும் இதே போல் கம்பி வலை அமைத்து நான்கு அறைகளாகப் பிரித்து அதிலும் 40 கோழிகளை கூடுதலாக வளர்க்கலாம். ஆக இரண்டு அடுக்கிலும் 8 அடியில் மொத்தம் 80 நாட்டுக் கோழிகளைப் பொரித்த 4 முதல் 5 மாதங்கள் வரை வளர்க்கலாம். 80 கோழிகளை வளர்க்க 2 அடுக்கு கூண்டு தயாரிக்க சுமார் ரூ.8 ஆயிரம் ஆகும். 40 கோழிகளை வளர்க்க ஒரு அடுக்கு கூண்டு செய்ய சுமார் 5000 ரூபாய் செலவாகும். கூண்டில் வளர்த்த கோழிகளை விற்ற பிறகு கிருமி நாசினி கரைசலால் தெளிப்பான் மூலம் சுத்தம் செய்து அதன்பின் மறுமுறை உபயோகிக்கலாம்.
அனுகூலங்கள் உரிய காலத்தில் வெள்ளைக்கழிச்சல் நோய்க்கு தடுப்பூசியான 4 வது நாள் மற்றும் 8-வது வாரத்தில் அளித்தால் தோய்த் தாக்காமல் ஆரோக்கியமாக வளர்க்க முடியும். கோழிகள் நோயின்றி வளரும். தடுப்பூசி போடுவது எளிது. தேவைப்படும்போது அலகு வெட்டுவது சுலபம். தேவைப்படும்போது வெளிப்புற ஒட்டுண்ணிகளை நீக்குவதும் எளிது. கூண்டில் வளரும் நாட்டுக்கோழிகள் முறையான பராமரிப்பிலும், தேவையான சத்துகள் அடங்கிய அடர்தீவனம் அளித்தும் சுமார் 3 மாதங்களில் சராசரியாக ஒரு கிலோ உடல் எடை வளரும். ஒரு கிலோ உடல் எடை வளர 3 முதல் 3 ¼ கிலோ தீவனம் உட்கொள்ளும்.கூண்டு முறையில் இறப்பு 4 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கும். எனவே கூண்டு முறையில் நாட்டுக்கோழி வளர்த்து சிறந்த வருவாய் ஈட்டலாம்.கூண்டு முறையில் நாட்டுக்கோழி வளர்ப்புகூண்டு முறையில் நாட்டுக்கோழி வளர்ப்புகூண்டு முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு