கோழிப்பண்ணைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்கள் மூலமாக அளித்தனர். அந்த வகையில் சின்னக்காம்பாளையம் சின்னத்தோட்டத்தை சேர்ந்தவர்கள் அளித்த ஒரு மனுவில், 'சின்னக்காம்பாளையம் பேரூராட்சி 6-வது வார்டில் தாய் கோழிப்பண்ணை செயல்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டில் மனு செய்தோம். கடந்த 10-ந் தேதி வரை கால்நடை பராமரிப்புத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை.
புதிதாக பண்ணை அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த மாத இறுதிக்குள் கோழிப்பண்ணையை காலி செய்து கொடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை இல்லாத பட்சத்தில் பொதுமக்கள், விவசாயிகள் சேர்ந்து வருகிற 1-ந் தேதி காலை 11 மணிக்கு தாராபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும்' என்று தெரிவித்துள்ளனர்.