சிவகாசியில் நின்று சென்ற கொல்லம் ரெயில்


சிவகாசியில் நின்று சென்ற கொல்லம் ரெயில்
x

சிவகாசியில் நின்று சென்ற கொல்லம் ரெயிலை பயணிகள் வரவேற்றனர்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசியில் நின்று சென்ற கொல்லம் ரெயிலை பயணிகள் வரவேற்றனர்.

கொல்லம் ரெயில்

கொல்லத்தில் இருந்து சென்னைக்கும், அதேபோல் சென்னையில் இருந்து கொல்லத்துக்கும் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரெயில் கொல்லத்தில் இருந்து சென்னை செல்லும் போது மாலையில் சிவகாசி ரெயில் நிலையத்தில் நின்று செல்லும். அதே நேரத்தில் சென்னையில் இருந்து கொல்லம் செல்லும் போது சிவகாசி ரெயில் நிலையத்தில் நின்று செல்வதில்லை. இதைதொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டது. தொகுதி எம்.பி. மாணிக்கம்தாகூர், எம்.எல்.ஏ. அசோகன் ஆகியோர் ரெயில்வே அதிகாரிகளை நேரில் சந்தித்து பல முறை கோரிக்கை வைத்தனர்.

சிறப்பான வரவேற்பு

மேலும் பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்தனர். இதையடுத்து அந்த ரெயில் சிவகாசியில் நின்று செல்ல ரெயில்வே நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி நேற்று அதிகாலை 2 மணிக்கு கொல்லம் ரெயில் சிவகாசி ரெயில் நிலையத்தில் நின்று சென்றது. இந்த ரெயில் சிவகாசிக்கு வந்த போது ரெயிலை ஓட்டி வந்தவர்களுக்கும், பாதுகாப்பு அதிகாரிகளுக்கும், பயணசீட்டு பரிசோதகருக்கும் ரெயில் ஆர்வலர்கள் சிறப்பான வரவேற்பு அளித்து இனிப்பு வழங்கினர். நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி தந்த தென்னக ரெயில்வே அதிகாரிகளுக்கு சிவகாசி பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.


Related Tags :
Next Story