கொண்டம்மாள் கோவில் புரவி எடுப்பு விழா
கொண்டம்மாள் கோவில் புரவி எடுப்பு விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை
அன்னவாசல் பெரிய குளம் அருகில் கொண்டம்மாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி திருவிழாவையொட்டி புரவி எடுப்பு விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு குதிரைகள், சாமிகள், காளைகள், பசுக்கள், திருபாதங்கள், குழந்தைகள், கோழிகள் உள்ளிட்ட பல்வேறு சிலைகளை எடுத்துக்கொண்டு மேளதாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக பள்ளூரணி அருகே உள்ள மந்தை திடலுக்கு கொண்டு வந்தனர். பின்னர் அங்கு வைத்து சிலைகளுக்கு கண்கள் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து அந்த சிலைகள் கொண்டம்மாள் கோவிலுக்கு கொண்டு வந்து வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story