கூழையன்குண்டு ஆகாசமாடன் சுவாமி கோவில் கொடை விழா
கூழையன்குண்டு ஆகாசமாடன் சுவாமி கோவில் கொடை விழா நடந்தது.
உடன்குடி:
கூழையன்குண்டு ஆகாசமாடன் சுவாமி கோவில் கொடை விழா கடந்த 9-ந்தேதி தொடங்கியது. அன்று காலை 6 மணிக்கு உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் இருந்து கடல்தீர்த்தம் மேள தாளத்துடன் எடுத்து வரப்பட்டது. காலை 11 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. மாலை 6 மணிக்கு நாட்டில் நல்ல கனமழை பொழிந்து பூமி செழிக்க வேண்டியும், மக்களிடம் அன்பு, சகோதர பாசம் வளர வேண்டியும் பெண்கள் பாடல்கள் பாடி திருவிளக்கு பூஜையும், இரவு 8 மணிக்கு வில்லிசையும், நள்ளிரவு 12மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. கடந்த 10-ந்தேதி காலை 8 மணிக்கு சுவாமிக்கு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பகல் 11மணிக்கு வில்லிசையும், மதியம் 12மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை, சுவாமி வீதி உலா வருதல், இரவு 7 மணிக்கு முளைப்பாரி எடுத்து ஊர்வலம், இரவு 8 மணிக்கு வில்லிசை, நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. நேற்று முன்தினம் பகல் 12மணிக்கு சுவாமிக்கு படைப்பு பூஜை நடந்தது.