கெங்கையம்மன் கோவிலில் கூழ்வார்க்கும் திருவிழா


கெங்கையம்மன் கோவிலில் கூழ்வார்க்கும் திருவிழா
x

தேசூர் நகரில் கெங்கையம்மன் கோவிலில் கூழ்வார்க்கும் திருவிழா நடந்தது.

திருவண்ணாமலை

சேத்துப்பட்டு

தேசூர் பேரூராட்சி பள்ளத்தெரு செட்டியார் சமூகத்தினர் சார்பில் கெங்கையம்மன் கோவில் கூழ்வார்க்கும் திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு கடந்த 19-ந் தேதி பக்தர்கள் காப்பு கட்டினர்.

பின்னர் திருவிழா கொடி ஏற்றப்பட்டது .உற்சவர் கெங்கையம்மன் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அலங்காரம் செய்து வைத்தனர். முன்னதாக பூ கரகம் ஜோடிக்கப்பட்டு பம்பை, உடுக்கை நாதஸ்வர, மேளத்துடன் ஊர்வலமாக வந்தனர்.

அப்போது பக்தர்கள் கூழை பாத்திரத்தில் ஊற்றி தலையில் சுமந்து கொண்டு பின்னால் வந்தனர். பின்னர் கோவில் அருகே உள்ள கொப்பரையில் கூழை ஊற்றினார்கள்.

தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அப்போது பக்தர்கள் பம்பை உடுக்கை அடித்து அருள் வாக்கு கேட்டனர். பின்னர் அனைவருக்கும் கூழ் வழங்கப்பட்டது.

இரவு கெங்கையம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து முத்து பல்லக்கில் வைத்து முக்கிய வீதியின் வழியாக எடுத்து வந்தனர்.

நாளை (திங்கட்கிழமை) இரவு நாடகம் நடைபெறுகிறது. பின்னர் மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை பள்ளத்தெரு செட்டியார் சமூகத்தினர் செய்து இருந்தனர்.


Next Story