கூத்தாண்டவர் கோவில் தேர்த்திருவிழா


கூத்தாண்டவர் கோவில் தேர்த்திருவிழா
x
தினத்தந்தி 7 July 2023 12:15 AM IST (Updated: 7 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருவெண்ணெய்நல்லூர் அருகே கூத்தாண்டவர் கோவில் தேர்த்திருவிழா நடைபெற்றது.

விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர்,

திருவெண்ணெய்நல்லூர் அருகே சி.மெய்யூர் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த கூத்தாண்டவர் கோவிலில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 18-ந் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று, வாண வேடிக்கையுடன் சாமி வீதி உலா நடைபெற்று வந்தது. தொடர்ந்து கூத்தாண்டவர் திருக்கண் திறத்தல் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர்த் திருவிழா நேற்று நடந்தது. இதில் சி.மெய்யூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனர். அப்போது, பக்தர்கள் தங்கள் நிலத்தில் விளைந்த தானியங்களையும், ரூபாய் நாணயங்களையும் சாமி மீது வீசி, நேர்த்திக்கடன் செலுத்தினர். அதன்பிறகு மாலையில் தீமிதி திருவிழாவும், திருநங்கைகள் ஒப்பாரி வைத்து தாலி அறுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.


Next Story