கோத்தகிரி ஈளாடா பகுதியில் புதிதாக பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
கோத்தகிரி ஈளாடா பகுதியில் இடிக்கப்பட்ட பயணிகள் நிழற்குடையை, மீண்டும் கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோத்தகிரி
கோத்தகிரி ஈளாடா பகுதியில் இடிக்கப்பட்ட பயணிகள் நிழற்குடையை, மீண்டும் கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பயணிகள் நிழற்குடை
கோத்தகிரியில் இருந்து கோடநாடு செல்லும் சாலையில் பல குக்கிராமங்களுக்கு செல்லும் முக்கிய சந்திப்பாக ஈளாடா கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியை சுற்றி தனியார் தேயிலை எஸ்டேட்டுகள், கர்சன், பட்டக்கொரை, பாரதி நகர், காந்திநகர், கதகஹட்டி, கதகத்துறை உள்ளிட்ட கிராமங்கள் அமைந்துள்ளன.
இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் கடந்த பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்த பஸ் நிறுத்த நிழற்குடை பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் ஆபத்தாக இருந்தது.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதியதாக நிழற்குடை கட்டுவதற்காக பழைய நிழற்குடை இடிக்கப்பட்டது. ஆனால் 4 மாத காலமாகியும் கூட புதிய நிழற்குடை அமைக்க அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்கள், பயணிகள், மாணவ, மாணவிகள் மழை மற்றும் வெயிலில் பஸ்சுக்காக சிரமத்துடன் காத்திருக்க வேண்டிய சிரமமான நிலை ஏற்பட்டுள்ளது. எனவே விரைவில் புதிய பேருந்து நிழற்குடையை விரைவில் கட்டித் தருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.