நாகர்கோவிலில் கோட்டார் போலீஸ் நிலையத்தை பா.ஜனதாவினர் முற்றுகைஎம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. பங்கேற்பு


நாகர்கோவிலில் கோட்டார் போலீஸ் நிலையத்தை பா.ஜனதாவினர் முற்றுகைஎம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. பங்கேற்பு
x

நாகர்கோவிலில் கோட்டார் போலீஸ் நிலையத்தை பா.ஜனதாவினர் முற்றுகையிட்டனர். எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. பங்கேற்றார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகா்கோவிலில் நடந்த இந்தி திணிப்பு எதிர்ப்பு விளக்க பொதுக்கூட்டத்தில் குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மேயருமான மகேஷ் பா.ஜனதாவினருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில் கோட்டார் போலீஸ் நிலையத்தில் நேற்று மாலையில் பா.ஜனதாவினர் திரண்டனர். அவர்கள் புகார் மீது வழக்குப்பதிவு ெ்சய்து நடவடிக்கை எடுக்கக்கோரி எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. தலைமையில் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதனைதொடர்ந்து இன்ஸ்பெக்டர் ராமர் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இதனைதொடர்ந்து எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்:-

உன்னத பதவியில் இருந்து கொண்டு மேயர் மகேஷ், பொதுக்கூட்டத்தில் பா.ஜனதாவினருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியது கண்டிக்கத்தக்கது. இதுதொடர்பாக கோட்டார் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நாளை (அதாவது இன்று) காலை 11 மணிக்குள் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், நாகா்கோவிலில் பா.ஜனதா சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

---


Next Story