கொத்தனார் மர்ம சாவு
கொத்தனார் மர்ம சாவு
அழகியபாண்டியபுரம்:
பூதப்பாண்டி பகுதியில் சிவன் கோவில் உள்ளது. நேற்று காலையில் இந்த கோவிலின் அருகில் ஆண் ஒருவர் படுத்து இருப்பதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கண்டனர். அவரது அருகில் ஒரு மோட்டார் சைக்கிளும் நின்றது. பொதுமக்கள் அருகில் சென்று எழுப்ப முயன்றபோது, அவர் ஏற்கனவே இறந்து கிடப்பது தெரிந்தது. இதுபற்றி பூதப்பாண்டி போலீசுக்கு தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்தனர். பின்னர், பிணமாக கிடந்தவரின் சட்டை பையை சோதனை செய்தனர். அதில் இருந்த ஓட்டுனர் உரிமம் இருந்தது. அதை வைத்து இறந்தது ஆரல்வாய்மொழி அருகே உள்ள வெள்ளமடம் ஆதித்தபுரம் பகுதியை சேர்ந்த கொத்தனாரான ராஜேந்திரன் (வயது 41) என்பதும், இவருக்கு மனைவி, 2 மகள்களும் உள்ளனர். நேற்று முன்தினம் மனைவியிடம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் புறப்பட்ட ராஜேந்திரன், பூதப்பாண்டி பகுதியில் கோவில் வந்ததும் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு தூங்கியபோது மர்மமான முறையில் இறந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்குபதிவு செய்து ராஜேந்திரன் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.