அடையாளம் தெரியாத வாகனம் மோதி கொத்தனார் சாவு


அடையாளம் தெரியாத வாகனம் மோதி கொத்தனார் சாவு
x
தினத்தந்தி 31 May 2023 12:15 AM IST (Updated: 31 May 2023 12:52 PM IST)
t-max-icont-min-icon

திருக்கடையூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி கொத்தனார் இறந்தார்

மயிலாடுதுறை

திருக்கடையூர்:

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகே பெருங்குடியை சேர்ந்த பாண்டியன் மகன் விஜயகுமார் (வயது 32),கொத்தனார் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் விஜயகுமார் நேற்று அதிகாலை திருக்கடையூர் பஸ் நிலையத்திலிருந்து பொறையாறு நோக்கி தனியார் பள்ளி அருகே சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் விஜயகுமார் சம்பவ இடத்திலே இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த பொறையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர்.


Next Story