ஆட்டோ மோதி கொத்தனார் சாவு
ஆறுமுகநேரி அருகே ஆட்டோ மோதி கொத்தனார் இறந்தார்.
ஆறுமுகநேரி:
வேம்பார் அருகே உள்ள கன்னிராஜபுரத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகன் சிவமுருகன் (வயது 39). கொத்தனாரான இவர், ஆறுமுகநேரி காயல்பட்டினம் பகுதியில் உள்ள ஒரு காண்ட்ராக்டரிடம் வேலை செய்து வந்தார். 27-ந் தேதி இரவு வேலை முடிந்து காயல்பட்டினத்தில் இருந்து நடந்து சென்றார். அழகாபுரி அருகே சென்றபோது பின்னால் வந்த ஆட்டோ இவர் மீது வேகமாக மோதியதில் இவர் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் காயல்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு சிவமுருகன் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றிய புகாரின் பேரில போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமலோற்பவம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.