குடிநீர் கேட்டு கொட்டாம்பட்டி யூனியன் அலுவலகம் முற்றுகை
குடிநீர் கேட்டு கொட்டாம்பட்டி யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
கொட்டாம்பட்டி
குடிநீர் கேட்டு கொட்டாம்பட்டி யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
யூனியன் அலுவலகம் முற்றுகை
கொட்டாம்பட்டி அருகே உள்ள வஞ்சிநகரம் ஊராட்சிக்கு உட்பட்ட காரைக்குடிபட்டியில் சுமார் 250 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் குடியிருப்பு பகுதியில் கடந்த சில தினங்களாக குடிநீர் முறையாக வினியோகிக்கப்படவில்லை என்றும், இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை தொடர்ந்து, இப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள், கொட்டாம்பட்டி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
இதனைத்தொடர்ந்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு அளித்த நிலையில் விரைவில் முறையான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர்.