கோட்டைப்பட்டினம் மாணவர் தங்கம் வென்று சாதனை
கோட்டைப்பட்டினம் மாணவர் தங்கம் வென்று சாதனை படைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் அருகே புதுக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த ராமன் (வயது 19). இவர், தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பஞ்சாப்பில் நடைபெற்ற தடகள போட்டியில் கலந்து கொண்டு 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். போட்டியில் வெற்றி பெற்று பதக்கத்துடன் சொந்த ஊர் திரும்பிய ஆனந்த ராமனுக்கு புதுக்குடி கிராம மக்கள் வழிநெடுக பட்டாசு வெடித்து மலர் தூவி சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். இதுகுறித்து அந்த பகுதி கிராம மக்கள் கூறுகையில், எங்கள் சின்ன மீனவ கிராமத்தில் இருந்து பஞ்சாப் வரை சென்று தங்கப்பதக்கம் வென்ற ஆனந்த ராமனுக்கு தமிழக அரசு முறையான பயிற்சி கொடுத்து அவரை சர்வதேச போட்டிக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அப்போது அவர் நிச்சயம் சர்வதேச போட்டியில் சாதிப்பார் என்று கூறினர்.