புஞ்சைபுளியம்பட்டி அருகே கோவில் கும்பாபிஷேகத்துக்காக 71 அடியில் அமைக்கப்பட்டுள்ள நவகாளியம்மன் சிலை

புஞ்சைபுளியம்பட்டி அருகே கோவில் கும்பாபிஷேகத்துக்காக 71 அடியில் அமைக்கப்பட்டுள்ள நவகாளியம்மன் சிலை
x

புஞ்சைபுளியம்பட்டி அருகே கோவில் கும்பாபிஷேகத்துக்காக 71 அடியில் அமைக்கப்பட்டுள்ள நவகாளியம்மன் சிலை

ஈரோடு

புஞ்சைபுளியம்பட்டி

புஞ்சைபுளியம்பட்டி அருகே காராப்பாடி கிராமத்தில் நவகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் விநாயகர், நவ காளியம்மன், கருப்பராயனுக்கு சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து கோபுரம் புதிதாக கட்டப்பட்டு மூலவர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் இக்கோவிலில் 71 அடி உயரத்துக்கு நவகாளி அம்மனுக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் கூறும்போது, 'தமிழகத்திலேயே முதன்முறையாக இந்த கோவிலில் நவகாளி அம்மனுக்கு 71 அடி உயரத்திற்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அம்மனை வழிபட்டால் குழந்தை பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை' என்றனர்.

Next Story