வைகாசி திருவிழா கொடியேற்றம்


வைகாசி திருவிழா கொடியேற்றம்
x

சிவகங்கையை அடுத்த நாட்டரசன் கோட்டையில் உள்ள கண்ணுடைய நாயகி அம்மன் கோவிலில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சிவகங்கை

சிவகங்கை,

சிவகங்கையை அடுத்த நாட்டரசன் கோட்டையில் உள்ள கண்ணுடைய நாயகி அம்மன் கோவிலில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்றம்

சிவகங்கையை அடுத்த நாட்டரசன்கோட்டையில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு சொந்தமான கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் உள்ளது. கண்நோய் உள்ளவர்கள் இந்த அம்மனுக்கு வெள்ளி கண் மலர் வாங்கி காணிக்கை யாக செலுத்தினால் கண்நோய் தீரும் என்று கூறுவார்கள்.

புகழ்பெற்ற இந்த கோவிலில் நடைபெறும் விழாக்களில் வைகாசி மாதம் நடைபெறும் வெள்ளி ரத விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது.10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா நேற்று காலை கொடியேற்றம் காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

நிகழ்ச்சியில் கோவில் கண்காணிப்பாளர் சரவண கணேசன், கண்காணிப்பாளர் இளங்கோ செட்டியார் மற்றும் ஏராள மான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி தினசரி கண்ணுடைய நாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை, தினசரிஒரு வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடக்கிறது. வருகிற 10-ந் தேதி வெள்ளிக்கிழமை தங்கரத புறப்பாடும் அன்று இரவு அன்ன வாகனத்தில் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது.

தேரோட்டம்

11-ந் தேதி இரவு 7 மணிக்கு மேல் வெள்ளி ரத நிகழ்ச்சி நடைபெறும். மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி குதிரை வாகனத்தில் கண்ணுடைய நாயகி அம்மன் திருவீதி உலா வருகிறார். 12-ந் தேதி தேரோட்டம், 13-ந் தேதி பால்குடம் ஊர்வலம் நடைபெறுகிறது.

14-ந் தேதி உற்சவ சாந்தி நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று மதியம் அன்னதானமும் மாலையில் அம்மன் உள்வீதி பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

சிறப்பு பஸ்

ஏற்பாடுகளை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார் உத்தரவின்பேரில் தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சரவணன் கணேசன், கவுரவ கண்காணிப்பாளர் இளங்கோ செட்டியார் மற்றும் தேவஸ்தான ஊழியர்கள் செய்து வருகின்றனர். வெள்ளி ரத நிகழ்ச்சியையொட்டி அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் மதுரை, காளையார் கோவில் மற்றும் சிவகங்கை ஆகிய ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.


Next Story