விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்


விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்
x

சித்தி விநாயகர் கோவிலில் நேற்று மகா கும்பாபிஷேகம்

திருப்பூர்

திருப்பூர், ஜூன்.11-

திருப்பூர் டவுன் கொங்கு மெயின்ரோடு திருநீலகண்டபுரம் வடக்கு எஸ்.எஸ்.நகரில் அமைந்துள்ள சித்தி விநாயகர் கோவிலில் நேற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக நேற்று முன்தினம் காலை மங்கள இசை, மகாகணபதி, மகாலட்சுமி நவக்கிரக ஹோமம், தீபாராதனை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. நேற்று காலை 4 மணிக்கு விநாயகர் வழிபாடு, ரக்சா பந்தனம், சித்தி விநாயகருக்கு 2-ம் கால வேள்வி பூஜைகள் தீபாராதனை நடைபெற்றது.

5.30 மணிக்கு கடம் புறப்பாடாகி 5.45 மணிக்கு கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது.

6 மணிக்கு மூலவர் மூத்த பிள்ளையார் சித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம், தீபாராதனை வழிபாடுகள் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை கோவை விஸ்வ மைய வேத ஆய்வு மைய தயாதாசன் ஆச்சார்யா நடத்தி வைத்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நேற்று காலை 7.30 மணி முதல் பிற்பகல் வரை ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை தலைவர் மாஸ்டர் எம்.ஆர்.குமரேசன், செயலாளர் நாகேந்திரன், பொருளாளர் ஜி.வெங்கடேஸ்வரன், துணைத்தலைவர் ஆர்.ராஜேந்திரன் மற்றும் கோவில் நிர்வாகிகள், பக்தர்கள செய்திருந்தனர்.


Related Tags :
Next Story