கோவில் கும்பாபிஷேகம்
கோவில் கும்பாபிஷேகம் நடந்தது..
ஆர்.எஸ்.மங்கலம்,
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா ஆனந்தூர் திருமேனிநாதர் சாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இ்தையொட்டி யாக சாலை பூஜை நடைபெற்றது. கிராம பொறுப்பாளர்கள் தலைமையில் சிறப்பு அழைப்பாளர்களாக சிவகங்கை சமஸ் தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார், தர்மர் எம்.பி., கருமாணிக்கம் எம்.எல்.ஏ., பரமக்குடி முன்னாள் எம்.எல்.ஏ. சதன்பிரபாகர், ஆனந்தூர் முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் சொக்கலிங்கம், ஆனந்தூர் முஸ்லிம் சுன்னத் ஜமாத் நிர்வாகிகள் மவுதார் சாகுல் ஹமீது, அப்துல்சலாம், முகம்மது இஸ்மாயில், சீனி உமர், ஊராட்சி தலைவர் துரத்தி நிஷா ஆகியோர் முன்னி லையில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றப் பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பகல் 12.00 மணி அளவில் பொதுமக்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.மங்கலம் தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் ஆனந்தூர் காந்தி, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் நந்திவர்மன், ஆனந்தூர் கூட்டுறவு சங்க தலைவர் நாகராஜன், யூனியன் துணை தலைவர் சேகர், மாவட்ட கவுன்சிலர் உஷாராணி, இலக்குவன், உடையப்பன், ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் துணைத்தலைவர் சேகர், ஒன்றிய கவுன்சிலர் முசிரியாபேகம் புரோஸ்கான், ராமநாதபுரம் மாவட்ட த.மு.மு.க. தலைவர் பட்டாணிமீரா உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.