உடலில் சேறு பூசி சேத்தாண்டி வேடமிட்டு பக்தர்கள் வினோத வழிபாடு
உடலில் சேறு பூசி சேத்தாண்டி வேடமிட்டு பக்தர்கள் வினோத வழிபாடு செய்தனர்.
ராமநாதபுரம்
கமுதி,
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பாம்பு நாயக்கன ்பட்டி கிராமத்தில் கரியமல்லம்மாள் கோவில் ஆடி பொங்கல் உற்சவ விழா நடந்தது. இதையயொட்டி கடந்த வாரம் காப்புக்கட்டு, கொடி யேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவில் நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு, அபிஷேகம் நடைபெற்றது. விழாவில் முழு உடல் ஆரோக்கியம், நீண்ட ஆயுள் பெறவும், மழை பெய்ய வேண்டியும் பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து சிறப்பு பிரார்த்தனை செய்தனர். விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று உடல் முழு ஆரோக்கியம் பெறவும், மழை பெய்ய வேண்டியும், தங்களது உடல் முழுவதும் பக்தர்கள் சேறு பூசி சேத்தாண்டி வேடம் அணிந்து வினோத வழிபாட்டில் ஈடுபட்டனர். விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story