108 திருவிளக்கு பூஜை


108 திருவிளக்கு பூஜை
x

மந்தை மாரியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது.

ராமநாதபுரம்

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பழனிவலசை என்ற கிராமத்தில் மந்தை மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆடி வெள்ளியை யொட்டி பழனி வலசை கிராம மக்களின் சார்பில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு சிறப்பு பூஜையில் ஈடுபட்டனர். பழனிவலசை பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் இளை ஞர்கள் கலந்துகொண்டனர். ஆடி வெள்ளியை தொடர்ந்து கோவில் முழுவதும் அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டு, வாழை மரங்கள் நடப்பட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு கோவிலில் உள்ள மந்தை மாரி அம்மனுக்கு பச்சை புடவை கட்டி அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் சிறப்பு பூஜைசெய்தனர்.


Next Story