அந்தியூா் அருகே காமாட்சி அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
அந்தியூா் அருகே காமாட்சி அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
ஈரோடு
அந்தியூர்
அந்தியூர் அருகே வேம்பத்தி வெள்ளாளபாளையத்தில் மிகவும் பிரசித்தி பெற்றதும், பழமையானதுமான கருப்பண்ணசாமி காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.
இதையொட்டி நேற்று வெள்ளாளபாளையம் பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் பவானி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்துக்கொண்டு வந்தனர். குதிரைகள் முன் செல்ல ஊர்வலமாக மேளதாளங்கள் முழங்க 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கோவிலை வந்தடைந்தனர். தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள யாகசாலை முன்வைத்து சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story