சென்னிமலை அருகே பட்டத்தரசி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்


சென்னிமலை அருகே பட்டத்தரசி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x

சென்னிமலை அருகே பட்டத்தரசி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

ஈரோடு

சென்னிமலை

சென்னிமலை எக்கட்டாம்பாளையத்தை அடுத்த சரளைக்காடு அருகே மேட்டூர் கரைப்புதூரில் நூற்றாண்டுகள் பழமையான பட்டத்தரசி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் புதிதாக திருப்பணிகள் செய்யப்பட்டு இதற்கான கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் காலை விநாயகர் பூஜையுடன் தொடங்கியது. பின்னர் கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம் ஆகியவை நடைபெற்றது. மேலும் அன்று மதியம் சாமிகள் பிரதிஷ்டை செய்தல், அஷ்டபந்தனம் சாத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.

நேற்று காலை விநாயகர் பூஜையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கி 2-ம் கால யாக பூஜை, நாடி சந்தானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. பின்னர் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் நடந்தது. விநாயகர், பட்டத்தரசி அம்மன், காளியம்மன், கன்னிமார், கருப்பண்ணசாமி ஆகியவற்றின் கோபுர விமான கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மகா அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை சரளைக்காடு, கரைப்புதூர், மேட்டூர், அண்ணாமலைபாளையம், சொக்கநாதபாளையம், எல்லை குமாரபாளையம் ஆகிய ஊர்களை சேர்ந்த பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story