புஞ்சைபுளியம்பட்டி மருந்தீசுவரர், பண்டுதகார சித்தர் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி
புஞ்சைபுளியம்பட்டி மருந்தீசுவரர், பண்டுதகார சித்தர் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி
ஈரோடு
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டி வடக்கு காந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற மருந்தீஸ்வரர், பண்டுதகார சித்தர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருமண தடை நீங்க திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை 9 மணி அளவில் உற்சவமூர்த்தியான நடராஜர், உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து யாக வேள்வி நடைபெற்றது. பின்னர் திருக்கல்யாண சீர்வரிசை பொருட்களை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். இதையடுத்து மதியம் 1 மணி அளவில் சாமிக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. பிறகு மருந்தீஸ்வரர், பண்டுதகார சித்தர், அம்மன் ஆகிய சாமிகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர்.
Related Tags :
Next Story