அம்மாபேட்டை அருகே அய்யப்பன் கோவில் கும்பாபிஷேகம்
அம்மாபேட்டை அருகே அய்யப்பன் கோவில் கும்பாபிஷேகம்
ஈரோடு
அம்மாபேட்டை
ஊமாரெட்டியூரில் உள்ள அய்யப்பன் கோவில் புனரமைப்பு பணிகள் கடந்த சில தினங்களாக நடந்து வந்தது. பணி முடிவடைந்ததை தொடர்ந்து கும்பாபிஷேக விழா தொடங்கியது. இதைத்தொடர்ந்து காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வந்தனர். பின்னர் கோவில் முன்பு யாக சாலை அமைக்கப்பட்டு 3 கால யாக பூஜைகள் நடைபெற்றன.
நேற்று முன்தினம் காலை முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் நடந்தது. கோபுர கலசங்களுக்கு வேதங்கள் முழங்க புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதையொட்டி அய்யப்பன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் பவானி தொகுதி கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ. உள்பட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story