சத்தியமங்கலம் அருகே மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
சத்தியமங்கலம் அருகே மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ஈரோடு
சத்தியமங்கலம்
சத்தியமங்கலத்தை அடுத்த கொமாரபாளையத்தில் பழமை வாய்ந்த மாகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் நடைபெற்று வந்தது. இதனைத் தொடர்ந்து கும்பாபிஷேக விழா கடந்த 5-ந் தேதி காலை 6 மணிக்கு கணபதி பூஜையுடன் தொடங்கியது. அதன்பின்னர் சத்தியமங்கலம் வரசித்தி விநாயகர் கோவிலில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வரப்பட்டது.
இதையடுத்து யாக சாலை பூஜைகள் நடைபெற்று வந்தன. நேற்று முன்தினம் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் நடந்தது. காலை 9 மணி அளவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு் அம்மனை தரிசனம் செய்தனர். அதன்பின்னர் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story