கருங்கல்பாளையம் சின்ன- பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா: கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி பெண்கள் வழிபாடு
கருங்கல்பாளையம் சின்ன- பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா: கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி பெண்கள் வழிபாடு
ஈரோடு
ஈரோடு கருங்கல்பாளையத்தில் பிரசித்தி பெற்ற சின்ன மாரியம்மன், பெரிய மாரியம்மன் ஆகிய கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களின் குண்டம் மற்றும் தேர் திருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
நேற்று முன்தினம் பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன் ஆகிய கோவில்களில் கம்பம் நடப்பட்டன. நேற்று கம்பத்துக்கு பெண்கள் புனிதநீர் ஊற்றி அம்மனை வழிபட்டனர். வருகிற 11-ந் தேதி காலை 9 மணிக்கு குண்டம் விழா நடக்கிறது. 13-ந் தேதி பகல் 11 மணிக்கு பொங்கல் விழாவும், 14-ந் தேதி இரவில் கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சியும், 15-ந் தேதி காலை 8 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறுகிறது.
Related Tags :
Next Story