மார்கழி மாத சிறப்பு பூஜைகள்
உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில் மார்கழி மாத சிறப்பு பூஜைகள் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
உடுமலை திருப்பதி கோவில்
உடுமலை தளிசாலையில் பள்ளபாளையம் அருகே உள்ள செங்குளம் கரைப்பகுதியில் உள்ளது உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவில். இந்த கோவிலில் மார்கழி மாத சிறப்பு பூஜை தொடங்கியது. இதையொட்டி உடுமலை திருப்பதிவேங்கடேச பெருமாள் கப்பாய் அங்கியுடன் சேவை நடந்தது.
வேங்கடேச பெருமாள் கப்பாய் அங்கியுடனான சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக காலை 5 மணிக்கு விஷ்வரூப தரிசனம் நடந்தது. மேலும் திருப்பள்ளிஎழுச்சி, திருப்பாவை சேவாகாலம் மற்றும் பஜனை நிகழ்ச்சிகள் நடந்தது.
இந்த நிகழ்ச்சிகளில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். இந்த கப்பாய் அங்கியுடன்சேவை வருகிற 29-ம்தேதிவரை நடக்கிறது. 30-ம்தேதி மற்றும் ஜனவரி 1-ம்தேதி திருமஞ்சனம் மார்கழி மாத சிறப்பு பூஜைகள்மார்கழி மாத சிறப்பு பூஜைகள்நடக்கிறது. அப்போது வேங்கடேச பெருமாள் தங்ககவசத்தில் சேவை நடக்கிறது.
ஜனவரி 2-ந் தேதி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.
பகல்பத்து, இராப்பத்து
வருகிற 22-ந்தேதி முதல் ஜனவரி 1-ந்தேதி வரை தினசரி காலை6.30 மணிமுதல் 8.30 மணிவரை பகல்பத்து நிகழ்ச்சியும், ஜனவரி 2-ந்தேதி முதல் 11-ந் தேதி வரை இராப்பத்து நிகழ்ச்சியும் நடக்கிறது. 12-ந் தேதிகாலை 7 மணி முதல் 8 மணிவரை நம்மாழ்வார் மோட்சம் நிகழ்ச்சியும், 9 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை இயற்பா, தேசிக பிரபந்தம், சாற்றுமுறை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.
14-ந்தேதி மாலை 5.30 மணிக்குமேல் ஆண்டாள் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது. நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை உடுமலை திருப்பதி பாலாஜி சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர், அறங்காவலர்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.