ஈரோடு மகாவீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியையொட்டி முன்ஏற்பாடு பணிகள் தீவிரம்


ஈரோடு மகாவீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியையொட்டி முன்ஏற்பாடு பணிகள் தீவிரம்
x

ஈரோடு மகாவீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி முன் ஏற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

ஈரோடு


ஈரோடு மகாவீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி முன் ஏற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

அனுமன் ஜெயந்தி

அனுமன் ஜெயந்தி விழா நாளை (வெள்ளிக்கிழமை) சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அனைத்து ஆஞ்சநேயர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும். ஈரோடு வ.உ.சி. பூங்காவில் உள்ள மகாவீர ஆஞ்சநேயர் கோவிலில் நாளை அதிகாலை 3 மணிக்கு மகா கணபதி அபிஷேகமும், 4 மணிக்கு மூலவருக்கு திருமஞ்சனம் நிகழ்ச்சியும் நடக்கிறது. அதைத்தொடர்ந்து அதிகாலை 5 மணிக்கு ஆஞ்சநேயருக்கு மலர் அலங்காரம் செய்யப்படுகிறது. மதியம் 1.30 மணிக்கு மூலவருக்கு ஒரு லட்சத்து 8 வடை மாலை சாற்றப்படுகிறது. அதன்பின்னர் வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்படுகிறது.

ஏற்பாடுகள் தீவிரம்

முன்னதாக இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு ஆஞ்சநேயர் திருவீதி உலா நடக்கிறது. ஈரோடு வ.உ.சி. பூங்கா மகாவீர ஆஞ்சநேயர் கோவிலில் தொடங்கும் திருவீதி உலா முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலில் நிறைவடைகிறது. இதையொட்டி மகாவீர ஆஞ்சநேயர் கோவிலில் பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்ய வசதியாக தற்போது தடுப்புகள் அமைக்கப்பட்டு முன் ஏற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும் பக்தர்களுக்கு வார வழிபாட்டுக்குழு சார்பில் அன்னதானம், லட்டு, கயிறு உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளது.


Next Story