பண்ணாரி அம்மன் கோவிலில் நடிகர் சசிகுமார் சாமி தரிசனம்
பண்ணாரி அம்மன் கோவிலில் நடிகர் சசிகுமார் சாமி தரிசனம் செய்தார்.
சத்தியமங்கலம்
பண்ணாரி அம்மன் கோவிலில் நடிகர் சசிகுமார் சாமி தரிசனம் செய்தார்.
சசிகுமார் தரிசனம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ளது பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில். இந்த கோவிலுக்கு நேற்று பகல் 11.30 மணி அளவில் நடிகர் சசிகுமார் வந்தார். பின்னர் அவர் கோவிலுக்குள் சென்று அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தார்.
கோபியில் நடந்த படப்பிடிப்புக்காக வந்த சசிகுமார், பண்ணாரி அம்மனை தரிசிக்க வந்தது தெரியவந்தது.
ரசிகர்கள்
கோவிலில் இருந்து வெளியே வந்த நடிகர் சசிகுமாரை அங்கிருந்தவர்கள் அடையாளம் கண்டுகொண்டனர். இதனால் ஏராளமான ரசிகர்கள் அவரை சூழ்ந்துக்கொண்டனர். அப்போது ஒரு பெண் தன் குழந்தையை சசிகுமாரிடம் கொடுத்தார்.
குழந்தையை சிறிது நேரம் கையில் வைத்து கொஞ்சிவிட்டு சசிகுமார் அந்த பெண்ணிடம் திருப்பி கொடுத்தார். அதன்பின்னர் அவர் கோவில் அலுவலகத்துக்கு சென்று அமர்ந்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.