அமாவாசையையொட்டி பண்ணாரி அம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்


அமாவாசையையொட்டி பண்ணாரி அம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
x

அமாவாசையையொட்டி பண்ணாரி அம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலத்தை அடுத்துள்ளது பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில். இங்கு நேற்று அமாவாசை என்பதால் பக்தர்கள் குவிந்தனர். காலை 6 மணிக்கு நடை திறப்பதற்கு முன்பாகவே பக்தர்கள் வந்து வரிசையில் காத்திருந்தனர். நடை திறக்கப்பட்டதும் அம்மனை தரிசித்து விட்டு வெளியே வந்து குண்டம் அருகே விளக்கேற்றி வழிபட்டனர். பின்னர் குண்டத்தில் உள்ள சாம்பலை எடுத்து நெற்றியில் வைத்துக்கொண்டனர். மதியம் கோவில் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல் கோபி அக்ரஹாரம் ஈஸ்வரன் கோவில் வீதியில் விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரர் கோவிலில் நேற்று மார்கழி மாத சர்வ அமாவாசையை முன்னிட்டு விசாலாட்சி விஸ்வேஸ்வர தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் மலர் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் கோபி மாதேசியப்பன் வீதியில் உள்ள மாதேஸ்வரர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

கோபி வடக்கு வீதியில் உள்ள பெரம்பலூர் முத்து மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் அம்மன் வெள்ளி கவசத்துடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதன்பின்னர் அம்மன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.


Next Story