பாசூர் வேங்கியாம்பாளையத்தில் மகாமாரியம்மன் கோவில் பொங்கல் விழா


பாசூர் வேங்கியாம்பாளையத்தில் மகாமாரியம்மன் கோவில் பொங்கல் விழா
x

பாசூர் வேங்கியாம்பாளையத்தில் மகாமாரியம்மன் கோவில் பொங்கல் விழா

ஈரோடு

ஊஞ்சலூர்

ஊஞ்சலூர் அருகே பாசூர் வேங்கியாம்பாளையத்தில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பொங்கல் விழா கடந்த 10-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 12-ந் தேதி கம்பம் நடும் நிகழ்ச்சியும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜையும், பூவோடு வைக்கும் நிகழ்ச்சியும், 17-ந் தேதி சப்பரத்தில் அம்மன் வீதி உலாவும், 18-ந் தேதி முப்பாட்டு மாவிளக்கு கோவிலை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று காவிரி ஆற்றில் இருந்து பால்குடம், தீர்த்தக்குடம், காவடி, அலகு குத்தி வரும் நிகழ்ச்சியும் நடந்தது. இதைத்தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். நேற்று மஞ்சள் நீராடல், அம்மன் ஊஞ்சல் சேவை நிகழ்ச்சி நடைபெற்றது.


Next Story