வெற்றி வேலாயுதசாமி கோவில் மலைத்தேரோட்டம்


வெற்றி வேலாயுதசாமி கோவில் மலைத்தேரோட்டம்
x
திருப்பூர்


ஊத்துக்குளி கதித்தமலை வெற்றி வேலாயுதசாமி கோவிலில் நேற்று மலைத்தேரோட்டம் மற்றும் மகா தரிசனம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ேதரை வடம் பிடித்து இழுத்தனர்.

கதித்தமலையின் சிறப்பு

கொங்கு வளநாட்டின் குறும்பு நாடாகிய பதியினில் இயற்கை எழில்வளம் நிறைந்த ஊத்துக்குளியில் கதித்தமலை என்று அழைக்கப்படும் மலைமீது வெற்றி வேலாயுதசாமி எனும் திருப்பெயருடன் முருகப்பெருமான் எழுந்தருளியுள்ளார். ஊத்துக்குளி எனும் பெயர் பெறக்காரணமே கண்கண்ட தெய்வமாய் கதித்தாசலபதி முருகப்பெருமான் தன் சக்தி ஆயுதமான வேலினால் ஊன்றப்பட்டு எழுந்த தீர்த்தம் உடையது இத்திருத்தலமாகும். மூர்த்தியினாலும், ஸ்தலத்தினாலும் பெருமை வாய்ந்தது.

தென்னகத்தில் மலைமீது திருவிழா கண்டு மரசிற்பத்திலான திருத்தேர் மலைக்கோவிலை சுற்றி வலம் வருவது இத்திருத்தலத்தின் தனிச்சிறப்பாகும். அருணகிரிநாதரின் தனிப்பாடல்களிலே கொண்டைச்செருக்கிலே எனத்தொடங்கி பதியினில் மங்கை கதித்தமாமலை என பாடப்பட்டது.

கீழ் தேரோட்டம்

இங்கு தைப்பூச திருவிழா கடந்த மாதம்(ஜனவரி) 28-ந்தேதி கதித்தமலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை மற்றும் மாலை நேரத்தில் சாமி திருவீதி உலா நிகழ்ச்சிகள் நடந்தது. கடந்த 4-ந்தேதி காலை சாமி திருவீதி உலா நிகழ்ச்சியும், மாலை திருக்கல்யாணமும் நடந்தது.

கடந்த 5-ந்தேதி கீழ்தேரோட்டம் நடைபெற்றது. அன்று அதிகாலை 3 மணிக்கு மகா அபிஷேகமும், மகா தீபாராதனையும் அதனைத்தொடர்ந்து சாமி புறப்பாடு நிகழ்ச்சியும், காலை சாமி ரத ஆரோகணம் கீழ் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 6-ந் தேதி பரிவேட்டை நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு கோவிலுக்கு முன்புறம் அமைந்துள்ள நவீன தெப்பத்தில் சாமி தெப்போற்சவம் நிகழ்ச்சி நடைபெற்றது.

மலைத்தேரோட்டம்

நேற்று காலை 7 மணிக்கு கதித்தமலை ஆண்டவருக்கு மகா அபிஷேகம் அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனையும், கதித்தமலை ஆண்டவர் சாமி ரத ஆரோகணம் மலைதேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் இளநீர் காவடி, கரகம் எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். தேரை இப்பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.

தேரில் முருகப்பெருமான் சிறப்பு மலர்அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பம்பை அதிர்வேட்டு முழங்க சிறப்பு நாதஸ்வர இசையுடன் "கதித்தமலை முருகனுக்கு அரோகரா கோஷம்" முழங்க பக்தர்களின் வெள்ளத்தின் நடுவே திருத்தேரானது தேர்நிலையிலிருந்து மலைக்கோவிலைச் சுற்றி வந்து தேர் நிலை நிறுத்தப்பட்டது.

அன்னதானம்

இதில் முன்னாள் அமைச்சர்கள் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம், கருப்பண்ணன், பெருந்துறை ஜெயக்குமார் எம்.எல்.ஏ., ஊத்துக்குளி ஒன்றியக்குழு தலைவர் பிரேமா ஈஸ்வரமூர்த்தி, முன்னாள் தலைவர் ரவிச்சந்திரன், ஊத்துக்குளி பேரூராட்சி தலைவர் பழனியம்மாள் ராசுகுட்டி, மாவட்ட கவுன்சிலர்கள் சக்திவேல், கண்ணம்மாள் ராமசாமி, செயல் அலுவலர் மாலதி, ஊத்துக்குளி இன்ஸ்பெக்டர் கவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நேற்று தேரோட்டத்தில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை ஊத்துக்குளி போலீசார் செய்திருந்தனர். நேற்று இரவு மகா தரிசனம் சுப்பிரமணியசாமி வள்ளி-தெய்வானையுடன் புஷ்ப பல்லக்கில் சாமி திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. இன்று(வியாழக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழாவுடன் தைப்பூச தேர்த்திருவிழா நிகழ்ச்சிகள்


Next Story