சென்னிமலை முருகன் கோவிலில் சீர்வரிசை பொருட்களுடன் ஒரு ஜோடிக்கு திருமணம்


சென்னிமலை முருகன் கோவிலில் சீர்வரிசை பொருட்களுடன் ஒரு ஜோடிக்கு திருமணம்
x

சென்னிமலை முருகன் கோவிலில் சீர்வரிசை பொருட்களுடன் ஒரு ஜோடிக்கு திருமணம்

ஈரோடு

சென்னிமலை

சென்னிமலை முருகன் கோவிலில் இந்து சமய அறநிலைய துறை சார்பில் சீர்வரிசை பொருட்களுடன் ஒரு ஜோடிக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு சென்னிமலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் டி.காயத்ரி இளங்கோ தலைமை தாங்கினார். குமாரவலசு ஊராட்சி தலைவர் வி.பி.இளங்கோ, சென்னிமலை கோவில் செயல் அலுவலர் ஏ.கே.சரவணன் ஆகியோர் முன்னிலையில் திருமணம் நடந்தது.

மணமக்களுக்கு தமிழக அரசு சார்பில் 4 கிராம் தாலிக்கு தங்கம், பட்டு புடவை, பட்டு வேட்டி, கட்டில், மெத்தை மற்றும் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 21 வகையான சீர்வரிசை பொருட்களும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோவில் பணியாளர்கள் மற்றும் மணமக்களின் உறவினர்கள் கலந்து கொண்டனர். திருமணத்தில் கலந்து கொண்ட மணமக்களின் உறவினர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் காலை உணவு வழங்கப்பட்டது.


Next Story