சத்தி அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழா - அடுத்த மாதம் 20-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது


சத்தி அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழா - அடுத்த மாதம் 20-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது
x

சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழா அடுத்த மாதம் 20-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது.

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழா அடுத்த மாதம் 20-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது.

பூச்சாட்டப்படுகிறது

சத்தியமங்கலத்தை அடுத்துள்ளது பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில். இங்கு கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை வணங்கி செல்வார்கள். மேலும் திங்கட்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, அமாவாசை, பவுர்ணமி, அரசு விடுமுறை நாட்களிலும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை வழிபடுவார்கள்.

இதுதவிர ஆண்டுதோறும் பங்குனி மாதம் இந்த கோவிலில் குண்டம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான குண்டம் விழா அடுத்த மாதம் 20-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது. பின்னர் 28-ந் தேதி இரவு கம்பம் சாட்டும் விழா நடக்கிறது.

குண்டம் திருவிழா

முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி ஏப்ரல் 3-ந் தேதி இரவு தொடங்குகிறது. மறுநாள் 4-ந் தேதி அதிகாலை 4 மணி அளவில் பக்தர்கள் குண்டம் இறங்குகிறார்கள். 5-ந் தேதி மாலை பவுர்ணமி திருவிளக்கு பூஜையும், புஷ்பரதமும் நடைபெறுகிறது. 6-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும், 7-ந் தேதி தங்க தேர் புறப்பாடும் நடக்கிறது. 10-ந் தேதி நடக்கும் மறு பூஜை விழாவுடன் திருவிழா முடிவடைகிறது.

கோவில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கிறது. கோவில் வளாகத்தை சுற்றிலும் பொக்லைன் எந்திரம் மூலம் முட்புதர்கள், செடி, கொடிகளை அகற்றும் பணியும், மேடு பள்ளங்களை சமன்படுத்தும் பணியும் நடந்தது.

ஏற்பாடுகள்

இதற்காக சத்தியமங்கலம், நம்பியூர், புளியம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள 55 பொக்லைன் எந்திர உரிமையாளர்கள் தங்கள் பொக்லைன் எந்திரத்துடன் பண்ணாரி மாரியம்மன் கோவிலுக்கு வந்துள்ளனர். அவர்கள் வாகனங்களுக்கு பூஜை போட்டு, அம்மனை வணங்கி சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்கிறார்கள்.

மேலும் கிடாய் வெட்டி அனைவரும் அங்கேயே உணவு உண்கிறார்கள். இந்த முட்புதர்களை அகற்றும் பணியை கோவிலுக்காக பல ஆண்டுகளாக பொக்லைன் எந்திர உரிமையாளர்களும், டிரைவர்களும் இலவசமாக செய்து வருவதாக தெரிவித்துள்ளனர்.


Next Story