அம்மாபேட்டை சொக்கநாதர் கோவிலில் ரூ.1¼ லட்சம் உண்டியல் காணிக்கை
அம்மாபேட்டை சொக்கநாதர் கோவிலில் ரூ.1¼ லட்சம் உண்டியல் காணிக்கை
ஈரோடு
அம்மாபேட்டை
அம்மாபேட்டையில் பிரசித்தி பெற்ற மீனாட்சி உடனமர் சொக்கநாத சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு தற்காலிக உண்டியல்கள் 4 அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் கோவிலில் நிரந்தர உண்டியல்கள் 3 உள்ளன. கோவிலில் உள்ள 7 உண்டியல்களையும் திறந்து எண்ணும் பணி இந்து சமய அறநிலையத்துறை அந்தியூர் சரக ஆய்வாளர் சி.மாணிக்கம், செயல் அலுவலர் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த பணியில் அம்மாபேட்டை டேலண்ட் பள்ளி மாணவிகள் மற்றும் கோவில் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதில் பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 183-ஐ செலுத்தி இருந்தனர். மேலும் தங்கம் 28.100 மில்லி கிராமும், 112.500 மில்லி கிராம் வெள்ளியும் பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக செலுத்தி இருந்தது.
Related Tags :
Next Story