குண்டம் விழாவுக்கு அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய விறகுகள்

குண்டம் விழாவுக்கு அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய விறகுகள்
x

குண்டம் விழாவுக்கு அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய விறகுகள்

ஈரோடு

அந்தியூர்

அந்தியூர் பஸ் நிலையம் அருகே மிகவும் பழமையானது பிரசித்தி பெற்றதுமான பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் குண்டம் விழா கடந்த மாதம் 16-ந் தேதி பூச்சாட்டு்தலுடன் தொடங்கியது. தொடர்ந்து கொடியேற்றப்பட்டு, எருமை கிடா பலி கொடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் தினமும் மாலை நேரங்களில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா தினந்தோறும் நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்கும் விழா நாளை மறுநாள் (புதன்கிழமை) நடைபெற உள்ளது.

இதைத்தொடர்ந்து தீ மிதிக்க கோவில் முன்பு 60 அடி நீளம் குண்டம் அமைக்கப்படுகிறது. இதற்காக அந்தியூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கோவிலுக்கு காணிக்கையாக விறகுகள் வழங்கி வருகின்றனர். அவை கோவில் கோபுரம் முன்புறம் மலை போல் குவிக்கப்பட்டுள்ளன. குண்டம் விழாவை தொடர்ந்து வருகிற 7-ந்தேதி முதல் 4 நாட்கள் தேரோட்டம் நடைபெற உள்ளது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

Next Story