சென்னிமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது; நாளை தேரோட்டம் நடக்கிறது
சென்னிமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாளை தேரோட்டம் நடக்கிறது.
சென்னிமலை
சென்னிமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாளை தேரோட்டம் நடக்கிறது.
சென்னிமலை முருகன்
பிரசித்திபெற்ற சென்னிமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா சிறப்பாக நடைபெறும்.
இதையொட்டி நேற்று சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் இருந்து உற்சவ மூர்த்திகளை படிக்கட்டுகள் வழியாக மலை மேல் உள்ள முருகன் கோவிலுக்கு அழைத்து சென்றனர். அங்கு முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து 12 மணி உச்சிகால பூஜைக்கு பிறகு பகல் 12.45 மணிக்கு கோவிலுக்கு முன்புறம் உள்ள கொடி கம்பத்தில் சேவல் கொடி ஏற்றப்பட்டது.
இதில் கட்டளைதாரர்களான சென்னிமலை செங்குந்த முதலியார் அனைவோர்கள் சமூகத்தினர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தேரோட்டம்
கொடியேற்றத்தையொட்டி வள்ளி-தெய்வானையுடன் முருகப்பெருமான் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
இன்று மாலை 6 மணிக்கு சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை காலை 5.30 மணிக்கு மேல் தேரோட்டம் நடைபெறுகிறது.
திரளான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வடக்கு ராஜ வீதி சந்திப்பில் நிறுத்துவார்கள். பின்னர் மாலை 5 மணிக்கு மீண்டும் தேர் வடம் பிடித்து நிலை சேர்க்கப்படுகிறது.