சென்னிமலை அருகே உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா


சென்னிமலை அருகே உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா
x

சென்னிமலை அருகே உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா

ஈரோடு

சென்னிமலை

சென்னிமலை அருகே மணிமலையில் பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பொங்கல் விழா கடந்த மாதம் 28-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. பின்னர் 2-ந் தேதி இரவு கோவிலில் கும்பம் வைத்தல் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று முன்தினம் காலை பக்தர்கள் கொடுமுடி சென்று காவிரி தீர்த்தம் கொண்டு வந்தனர். பின்னர் அன்று இரவு சென்னிமலை மாரியம்மன் கோவிலில் இருந்து தீர்த்த குடங்களுடன் பக்தர்கள் பண்ணாரி மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். அங்கு சாமிக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் முளைப்பாரி எடுத்தல், மாவிளக்கு பூஜை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று அதிகாலையில் பக்தர்கள் அலகு குத்தியும், அக்னி கும்பம் எடுத்தும் கோவிலுக்கு சென்றனர். அதைத்தொடர்ந்து மணிமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று காலை 8 மணிக்கு மறுபூஜை மற்றும் மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை மணிமலை ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.


Next Story