கொளாநல்லி குழலி அம்மன் கோவிலில் தேரோட்டம்


கொளாநல்லி குழலி அம்மன் கோவிலில் தேரோட்டம்
x

கொளாநல்லி குழலி அம்மன் கோவிலில் தேரோட்டம்

ஈரோடு

ஊஞ்சலூர்

ஊஞ்சலூர் அருகே உள்ள கொளாநல்லியில் குழலி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் தேர்த்திருவிழா கடந்த 28-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் இரவு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு வந்தது.

2-ந் தேதி அன்று காவிரியில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். 3-ந் தேதி அன்று கிராம சாந்தி, கொடி ஏற்றம் நிகழ்ச்சியும், 4-ந் தேதி இரவு படைக்கலம், அம்மை அழைத்தல், குதிரை துள்ளல் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. நேற்று முன்தினம் இரவு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் அம்மன் திருவீதி உலா நடந்தது. நேற்று காலை 10 மணி அளவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடந்தது. முதலாவதாக விநாயகர் தேரும், அதன்பின்னால் குழலி அம்மன் தேரையும் பக்தர்கள் இழுத்து சென்றனர். கோவில் முன்பு வரை இழுத்து கொண்டு சென்று தேர்கள் நிறுத்தப்பட்டன. அதன்பின்னர் மாலை 5 மணி அளவில் மீண்டும் தேர் இழுத்து செல்லப்பட்டு நிலை சேர்க்கப்பட்டது. இன்று (வெள்ளிகிழமை) மறு அபிஷேகத்துடன் திருவிழா முடிவடைகிறது.


Next Story