பவானி ஆதிகேசவ பெருமாள் கோவிலில் தேரோட்டம்; திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்
பவானி ஆதிகேசவ பெருமாள் கோவிலில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்தனர்.
பவானி
பவானி ஆதிகேசவ பெருமாள் கோவிலில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்தனர்.
ஆதிகேசவ பெருமாள்
பவானியில் பிரசித்திபெற்ற சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆதிகேசவ பெருமாளுக்கும் தனி சன்னதி உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு விழாவுக்காக கடந்த மாதம் 26-ந் தேதி சங்கமேஸ்வரர் கோவிலில் கொடி ஏற்றப்பட்டது. 27-ந் தேதி ஆதிகேசவ பெருமாள் சன்னதியில் கொடியேற்றப்பட்டது. 30-ந் தேதி பஞ்சமூர்த்திகள் புறப்பாடு 63 நாயன்மார்கள் திருவீதி உலா நடந்தது.
இதைத்தொடர்ந்து நேற்று காலை ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் ஆதிகேசவ பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
தேரோட்டம்
அதன்பின்னர் உற்சவ மூர்த்திகள் தேரில் எழுந்தருளினார்கள். சிறப்பு பூஜைகள் செய்த பின்னர் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக சென்று தேர் மீண்டும் கோவிலை அடைந்தது.
இன்று (வியாழக்கிழமை) காலை வேதநாயகி அம்மன் உடனமர் சங்கமேஸ்வருக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. மாலையில் உற்சவமூர்த்திகள் தேரில் எழுந்தருள செய்து தேரோட்டம் நடக்கிறது. 7-ந் தேதி மஞ்சள்நீர் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.