கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் தேர்த்திருவிழா


கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் தேர்த்திருவிழா
x

கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் தேர்த்திருவிழா

ஈரோடு

கொடுமுடி

கொடுமுடியில் பழமையான மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவில் உள்ளது. சிவன், பிரம்மா, விஷ்ணு என மும்மூர்த்திகள் வாசம் செய்யும் இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை தேர்த்திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு விழாவுக்காக கடந்த 25-ந் தேதி கோவிலில் கொடி ஏற்றப்பட்டது. இந்தநிலையில் நேற்று தேர்த்திருவிழா நடைபெற்றது. ஒரு தேரில் விநாயகரும், மற்ற 2 தேர்களில் உற்சவர் மகுடேஸ்வரரும், வீரநாராயண பெருமாளும் எழுந்தருள செய்தனர். பின்னர் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர்களை இழுத்தனர். பக்தர்களுக்கு அன்னதானமும் நடைபெற்றது.


Next Story