மதுரை வீரன் கோவிலில் சித்திரை திருவிழா: பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன்
மதுரை வீரன் கோவிலில் சித்திரை திருவிழா: பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன்
ஈரோடு
ஈரோடு நேதாஜிரோடு முனிசிபல் சத்திரத்தில் பிரசித்தி பெற்ற மதுரைவீரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பட்டத்தரசியம்மன், ஏழு கன்னிமாா்கள் சன்னதிகளும் உள்ளன. கோவிலின் சித்திரை திருவிழா கடந்த 2-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தக்குடம் எடுத்து கோவிலுக்கு வந்தனர். மேலும், பக்தர்கள் அலகு குத்தி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
இன்று (வெள்ளிக்கிழமை) பகல் 12 மணிக்கு சாமிக்கு பொங்கல் வைத்து கிடாய் வெட்டும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 9 மணிக்கு மதுரைவீரனின் வரலாற்று நாடகம் நடைபெறுகிறது. நாளை (சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு வாய்க்காலில் கரகம் விடும் நிகழ்ச்சியும், தொடர்ந்து மறுபூஜையும் நடைபெறுகிறது.
Related Tags :
Next Story