சிவகிரி வேலாயுதசாமி கோவிலில் தேர்த்திருவிழா; திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்

சிவகிரி வேலாயுதசாமி கோவிலில் தேர்த்திருவிழா; திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்
x

சிவகிரி வேலாயுதசாமி கோவிலில் நடந்த தேர்த்திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.

ஈரோடு

சிவகிரி

சிவகிரி வேலாயுதசாமி கோவிலில் நடந்த தேர்த்திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.

திருக்கல்யாணம்

சிவகிரியில் பிரசித்திபெற்ற வேலாயுதசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்ரா பவுர்ணமியன்று தேர்த்திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு விழாவுக்காக கடந்த மாதம் 29-ந் தேதி கோவிலில் கொடி ஏற்றப்பட்டது.

இதையடுத்து நாள்தோறும் சாமிக்கு அபிஷேகங்கள் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

இதையடுத்து நேற்று முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா நடைெபற்றது. காலை 7 மணி அளவில் வள்ளி-தெய்வானையுடன் வேலாயுதசாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

வடம் பிடித்தனர்...

இதைத்தொடர்ந்து சிறிய தேரில் விநாயகரும், பெரிய தேரில் வள்ளி-தெய்வானையுடன் வேலாயுதசாமியும் எழுந்தருளினார்கள். மாலை 6 மணி அளவில் தேரோட்டம் நடைபெற்றது. 2 தேர்களையும் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

இன்று (சனிக்கிழமை) தேர் மீண்டும் இழுக்கப்பட்டு நிலை சேர்க்கப்படுகிறது. நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடராஜர் தரிசனம் நடைபெற உள்ளது.

Next Story