2 கோவில்களுக்கு சொந்தமான ரூ.1½ கோடி நிலம் மீட்பு


2 கோவில்களுக்கு சொந்தமான ரூ.1½ கோடி நிலம் மீட்பு
x
திருப்பூர்


தாராபுரம் அருகே 2 கோவில்களுக்கு சொந்தமான ரூ.1½ கோடி மதிப்பிலான 13.56 ஏக்கர் நிலம் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டது.

கோவில் நிலம் ஆக்கிரமிப்பு

தாராபுரம் சின்னக்காம்பாளையம் செல்வக்குமாரசாமி கோவிலுக்கு சொந்தமான 5.28 ஏக்கர் நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் குமரகுரு உத்தரவின் பேரில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அப்போது அந்த நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. ஆக்கிரமிப்பாளர்கள் தாங்களாகவே முன்வந்து நிலத்தை ஒப்படைத்தனர்.அதன்படி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் செல்வராஜ், தாசில்தார் கோபாலகிருஷ்ணன், சரக ஆய்வாளர் வடிவுக்கரசி, செயல் அதிகாரி சதீஷ் மற்றும் கோவில் பணியாளர்கள் முன்னிலையில் 5.28 ஏக்கர் நிலம் கோவில் பெயரில் கையகப்படுத்தப்பட்டது. மேலும் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது. மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.80 லட்சமாகும்.

அய்யனார் கோவில்

இதுபோல் தாராபுரம் தாலுகா அம்மாபாளையம் அய்யனார் கோவிலுக்கு சொந்தமான 8.28 ஏக்கர் புன்செய் நிலம் ஆக்கிரமிப்பில் இருந்தது. அதை ஆக்கிரமிப்பாளர்கள் தாங்களாகவே முன் வந்து நிலத்தை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அந்த நிலத்தை கோவில் பெயரில் சுவாதீனம் பெற்று அறிவிப்பு பலகையை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் வைத்தனர். மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.80 லட்சமாகும்.


Next Story